// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்யும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்யும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

 பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணம் செய்யும் மாணவர்களுக்குக் கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.....

திருச்சி தில்லை நகரில் 75 ஆவது சுதந்திர தின விழா சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவிழா வினையொட்டி சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சியை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் 2 கோடி 70 லட்சம் மதிப்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன......

இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது.......

பள்ளி மாணவர்கள் வேண்டும் என்றே படிக்கட்டுகளில் நின்று செல்லும்  நிலை அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டில் அதிகம் நடைபெறுவதாக தகவல் கிடைத்திருக்கிறது. தனியார் அமைப்பின் வாயிலாக அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்.பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் தொங்கிக் கொண்டு வருவதற்கு அனுமதி அளித்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்று ஏற்கனவே கூறி உள்ளோம் என தெரிவித்தார்

Post a Comment

0 Comments