தமிழர்களின் பாரம்பரிய சிலம்பக்கலையினை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவும், அனைவரும் சிலம்பத்தை கற்று உலகம் முழுவதும் சிலம்பகலையின் புகழைக் பரப்பும் வகையில் சிலம்பத்தில் போட்டிகள் நடத்தி மாணவர்களை ஊக்குவிக்கவும், உலக சாதனை நிகழ்ச்சிகளும் அரங்கேறி வருகிறது.
அந்த வகையில் இந்திய சிலம்ப கோர்வை மற்றும் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை சார்பில் சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சி இன்று திருச்சியில் நடைபெற்று வருகிறது. இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளைச் சேர்ந்த சிலம்ப வீரர் வீராங்கனைகள் இந்த உலக சாதனை நிகழ்வில் பங்கேற்று சிலம்பம் சுற்றி வருகின்றனர்.அந்த வகையில் சிங்கப்பூரில் 47பேர் இந்திய நேரப்படி அதிகாலை 2.30மணி முதல் 7 மணி வரை இடைவிடாது சிலம்பம் சுற்றிய நிலையில், இந்தியாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிலம்ப வீரர்-வீராங்கனைகள் 293 பேர் பங்கேற்று திருச்சி கி.ஆ.பெ விசுவநாதன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 7 மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை சுழற்சி முறையில் சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்த்தி வருகின்றனர், இதனைத் தொடர்ந்து மலேசியாவில் 63 சிலம்ப வீரர் வீராங்கனைகள் இந்திய நேரப்படி பிற்பகல் மூன்று மணி முதல் 9 மணி வரை சிலம்பம் சுற்றி சாதனை படைக்க உள்ளனர்.இந்த சாதனையானது சாதனை நடுவர்களால் ஆன்லைன் மூலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு லண்டன் ஹார்வேர்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க உள்ளது, மேலும் விசாரணையில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது..
இதனிடையே சிலம்பத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்தவரும், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்றவருமான திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி சுகித்தா காலை 7 மணி முதல் தொடர்ச்சியாக 4மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை நிகழ்த்தினார். இந்த சாதனை அங்கீகரிக்கப்பட்டு லண்டன் ஹார்வர்ட் உலக சாதனைப் புத்தகத்தில் சாதனைக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த உலக சாதனை நிகழ்வினை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்று வீரர் வீராங்கனைகளை உற்சாகமூட்டி மகிழ்ந்து கண்டு ரசித்தனர்.
0 Comments