// NEWS UPDATE *** "இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது" - பள்ளிக்கல்வி துறை அதிரடி *** தாய் தந்தைக்கு சல்யூட் அடித்து IPS அதிகாரி காவல்துறை கண்காளிப்பாளராக பதவியேற்ற நெகிழ்ச்சி சம்பவம்

தாய் தந்தைக்கு சல்யூட் அடித்து IPS அதிகாரி காவல்துறை கண்காளிப்பாளராக பதவியேற்ற நெகிழ்ச்சி சம்பவம்

தாய் தந்தையருக்கு சல்யூட் அடித்து  கன்னியாகுமரி மாவட்ட 52 வது காவல்துறை கண்காணிப்பாளராக  ஹரி கிரன் பிரசாத் ஐ.பி.எஸ் பொறுப்பேற்று கொண்டார்.!!!

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செயல்பட்டு வந்த பத்ரி நாராயணன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். 

அதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ஹரி கிரன் பிரசாத் நேற்று நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்று கொண்டார். 

இவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் 52 வது கண்காணிப்பாளர். முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தனது தாய் தந்தையருக்கு சல்யூட் அடித்து பெற்றோருக்கு மரியாதை செலுத்திய நிகழ்வு அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரை நெகிழ்ச்சியடைய செய்தது.

Post a Comment

0 Comments