// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** மத்திய அரசை கண்டித்து SRMU தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து SRMU தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு ரயில்வே தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுவதையும் கண்டித்து ரயில்வே தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழகம் முழுவதும் இன்று மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில் மறியல், கண்டனப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 



இதன் ஒரு பகுதியாக திருச்சியில் இன்று  SRMU சங்கத்தின் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் உள்ள டிஆர்எம் யூ அலுவலகம் முன்பு  துணைப் பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்தின் போது புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு  பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பதை நிறுத்த வேண்டும், நான்கு தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்ப பெற வேண்டும், எஸ்மா சட்டம் மூலம் தொழிலாளர்களும் விரோதமான சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், ரயில்வே துறையில் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments