சமீபத்தில் வெளியான "காஷ்மீர் பைல்ஸ்" திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மற்றும் நடிகர்களை அழைத்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். காரணம் அத்திரைப்படத்தில் இந்து பண்டிட்டுகளை இஸ்லாமியர் துன்புறுத்துவதாக சித்தரிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இப்படத்தை கண்டித்து இஸ்லாமிய இயக்கங்களும் இது சிறுபான்மை மக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் வகையில் இத்திரைப்படம் உள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று திருச்சி மெயின்காட்கேட்டில் உள்ள திரை அரங்கத்தில் காஷ்மீர் பைல்ஸ் படம் திரையிடுவதை தடை செய்ய வலியுறுத்தி திருச்சி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட மண்டல செயலாளர் ஷஜன்பைஜி தலைமையிலான கட்சியினர் நூற்றுக்கு மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டி வலியுறுத்தி கோஷமிட்டனர்.
0 Comments