கர்நாடக பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர விதித்த தடை செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு முஸ்லீம்கள் மட்டுமன்றி ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் திருச்சி பாலக்கரை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தீர்ப்பு இஸ்லாமியர்களின் உரிமையையும் தனி நபர் மத சுதந்திரத்தை பறிக்கும் செயலாக உள்ளது. மேலும் இது மறைமுகமாக இஸ்லாமிய பெண்களின் கல்வியை தடுக்கும் செயலாகவும் உள்ளது.
எனவே இந்த தீர்ப்பை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலிறுத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
0 Comments