// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கர்நாடக பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர விதித்த தடை செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு முஸ்லீம்கள் மட்டுமன்றி ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் கல்லூரி அமைந்துள்ள டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் ஹிஜாப் தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இஸ்லாமிய பெண்களின் உரிமையை பறிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் கல்வியை மறைமுகமாக தடுக்கும் வகையில் அமைந்துள்ள கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.


Post a Comment

0 Comments