கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கூடாது என்ற உத்தரவு செல்லும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது...இந்த தீர்ப்புக்கு எதிராக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் பதிவு செய்துள்ளது. ஹிஜாப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கர்நாடகத்தில் நாளை முஸ்லிம் அமைப்புகள் சார்பில் பந்த் நடத்தப்பட உள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரில் போராட்டங்கள், பேரணிகள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.....
இந்நிலையில் கர்நாடகம் முழுவதும் நாளை முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த பந்த் நடத்த இஸ்லாமிய அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.. இதனால் நாளை மாநிலம் முழுவதும் கடைகளை அடைத்து ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது...
இந்த பந்த் அறிவிப்பால் கர்நாடகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தில் முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹிஜாப் தடையை எதிர்த்து மாணவிகள் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments