திருச்சி NIT "பிரக்யான்" தொழில்நுட்ப மேலாண்மை விழா 3 நாட்கள் நடைபெற உள்ளது...
திருச்சி NIT இயக்குனர் அகிலா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறுகையில், திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் என்.ஐ.ஆர்.எஃப் 2021 தரவரிசையில் , நாட்டின் அனைத்து என்.ஐ.டிக்களிலும் முதலிடத்தையும், பொறியியல் பிரிவில் 9ம் இடத்தையும் ஒட்டுமொத்த பிரிவில் 23ம் இடத்தையும் பெற்றுள்ளது.
இந்த வியூகத் திட்டமானது, நெகிழ்வுத்தன்மைமிக்க பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல், தொழிற்சாலைகளுடனான கூட்டு முயற்சிக்கு வித்திட்டல், சிறந்த நிறுவனங்களில் இருந்து மதிப்பெண் பரிமாற்றம் மற்றும் பலவற்றால் புதிய கல்வி கொள்கை 2020வுடன் ஏற்கனவே ஒன்றியிருக்கிறது. புதிய கல்விக் கொள்கை 2020ல் உள்ள, மொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்தும் இணையவழிப் பாடங்கள் மற்றும் படிப்புகள் போன்ற இன்னும் பல முன்னெடுப்புகளை நடைமுறைப்படுத்த வியூகத் திட்டத்தை மாற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. என கூறினார்.செய்தியாளர் சந்திப்பின் போதும் டீன் குமரேசன், மாணவர் சங்க தலைவர் மாதவ கலாவன், பேராசிரியர் பக்தவத்சலம் ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments