திருச்சி மாவட்டம், கண்ணனூர் அருகே கண்ணனூர் பாளையம் அமைந்துள்ளது. இதில் பாளையம் பகுதிக்கு மட்டும் கடந்த ஆறு மாதங்களாக காவிரி நீர் சரிவர வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதையடுத்து சுமார் 100 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் துறையூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் பாளையம் என்ற இடத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதையடுத்து துறையூரில் இருந்து நாமக்கல் மற்றும் முசிறி செல்லும் பேருந்துகள் தேங்கியது. காலை நேரம் என்பதால் பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல இயலாமல் சிரமப்பட்டனர்.
மறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தா.பேட்டை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி பொதுமக்களின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.
0 Comments