கர்நாடக பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர விதித்த தடை செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு முஸ்லீம்கள் மட்டுமன்றி ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி பாலக்கரை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியனர் கலந்து கொண்டனர்
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இஸ்லாமிய பெண்களின் உரிமையை பறிப்பதோடு மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களின் மத உரிமையில் கை வைப்பதாக உள்ளது இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் துணை ஒருங்கிணைப்பாளர் ஹஸ்ஸான் பைஜி தலைமையில் கண்டன உரையை ஆற்றினார்....
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் கே.எம் சரீப் வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் சபியுல்லா, துணை செயலாளர் உதுமான் அலி, ஜாக் அமைப்பு முகமது அலி, அகில இந்திய முஸ்லீம் லீக் மாநில தலைவர் காஜா மைதீன் ,வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் நிர்வாகி அலாவுதீன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ராயல் சித்திக் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கர்நாடகாவின் உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமியருக்கு விரோதமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை கண்டித்து கோஷமிட்டனர்.
0 Comments