// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** பேரணியை தடுத்து நிறுத்திய தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பேரணியை தடுத்து நிறுத்திய தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் தடை செய்த தமிழக அரசை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கி 15 வருடம் ஆகிறது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மக்களாட்சியை பாதுகாப்போம்  என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் இன்று ஒற்றுமை பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் நடைபெற இருந்தது.. இந்நிலையில் தமிழகத்தில் சேலம்.


தாம்பரம் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்திற்கு காவல்துறையினர் தடை விதித்தனர்.


 

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழக அரசு மற்றும் காவல்துறை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி பாலக்கரை பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் மாவட்ட தலைவர் 

சபியுல்லா தலைமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்

கண்டன உரையை 

SDPI நிர்வாகி இமாம் ஹஸான் பைஜி வழங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐயின் மக்களின் பாதுகாப்புக்காக பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு காவல்துறையினர் தடை விதித்தது கண்டனத்துக்குரியது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்

மாவட்ட செயலாளர் 

முஜிபூர்  ரஹ்மான்,

SDPI வடக்கு மாவட்ட தலைவர் முபாரக்அலி,  

NWF இஸ்லாமிய அமைப்பின் மாவட்ட தலைவர் பரிதா, WIM இஸ்லாமிய அமைப்பின் மாவட்ட தலைவர் முமினா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments