ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டு பகுதியான அண்ணாமலை லே அவுட் (மேட்டூர் ரோடு ராயல் தியேட்டர் எதிரில் உள்ள சாலையில்) சாலை வழி நெடுகிலும் குப்பை கழிவுகள் அகற்றப்படாமலும் சாக்கடை கால்வாய்களில் தூர் வாராத காரணத்தினால் குப்பைகளை தேங்கியும்காணப்படுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது.....
மாலை நேரங்களில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது இப்பகுதி முழுவதும் மருத்துவமனைகள் அதிகம்உள்ள பகுதியாகும் இங்கு நோயாளிகள்அதிக அளவில் வந்து செல்கின்றனர் இப்பகுதியில் சாக்கடையில் உள்ள குப்பை கழிவுகள் நீண்டநாட்களாக தூர்வாரப்படாமல் காணப்படுவதால் மழைக்காலங்களில் மழைநீர் குப்பை கழிவுநீர் செல்ல வழிவகை இல்லாமல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது....
குறிப்பாக நல்லி மருத்துவமனை வளாகம் , நியூரோ கிளினிக் மற்றும் குமார் டீக்கடை பகுதிகளில் சாக்கடைகளில் குப்பை கழிவுகள் தேங்கி நீண்டநாட்களாக காணப்படுகிறது...
குறிப்பாக இப்பகுதி மருத்துவமனைகள் அதிகம் காணப்படுவதால் நோயாளிகளும் அதிகளவில் இங்கு வந்து செல்கின்றனர் ஆகையால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதிகளில் வழிநெடுகிலும் உள்ள குப்பை கழிவுகளை அகற்றியும் சாக்கடை கால்வாய்களில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றியும் நடவடிக்கை எடுத்து உதவுமா என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை எதிர்பார்த்து உள்ளார்கள்.....ஈரோடு அன்புதம்பி
மாவட்ட நிருபர்
0 Comments