NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** அரசு பள்ளியில் வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

அரசு பள்ளியில் வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தவின்படி, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை மற்றும் உயரே பறக்க ஆசை, நான் முதல்வன் நிகழ்ச்சி இணையதள வாயிலாக பயில்வதை  மாவட்ட ஆட்சித்தலைவர், டாக்டர்.த.பிரபுசங்கர்,  பார்வையிட்டார்.

+2 பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை மற்றும் உயரே பறக்க ஆசை, என்ற நான் முதல்வன் நிகழ்ச்சி இணையதள வாயிலாக  மாணவர்கள் பயில்வதை மாவட்ட ஆட்சித்தலைவர், டாக்டர்.த.பிரபுசங்கர்,  பார்வையிட்டார்.....இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், +2 பயிலும் மாணவ மாணவியர்கள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து தெரிந்து கொள்வதற்காக சிறகை விரித்து உயரே பறந்து உலகை காண்போம் வா என்ற நான் முதல்வன் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்,


 கரூர் மாவட்டத்தில் உள்ள 68 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 5880 மாணவ மாணவியர்கள் பயன்பெற உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வங்கி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல துறைகளின் நிபுணர்கள் மாணவ மாணவியர்களுக்கு இணையதள வாயிலாக கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை வழங்க உள்ளார்கள். 18.04.2022 மற்றும் 22.04.2022 ஆகிய நாட்கள் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும், 19.04.2022 மற்றும் 23.04.2022 ஆகிய நாட்களில் கலைப்பிரிவு மாணவர்களுக்கும் என இரண்டு கட்டங்களாக கரூர் மாவட்டத்தில் நான் முதல்வன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர், தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் .மதன்குமார், கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை திருமதி.ரேவதி, கரூர் வட்டாட்சியர் பன்னீர்செல்வம் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


கரூர் நிருபர் : குமரவேல் 

Post a Comment

0 Comments