BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி மாவட்ட கிளை நிர்வாகக்குழுக்கூட்டம்

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி மாவட்ட கிளை நிர்வாகக்குழுக்கூட்டம்

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி மாவட்ட கிளை நிர்வாகக்குழுக்கூட்டம் நடைபெற்றது...இந்த கூட்டத்தில் ஆலோசகர் இளங்கோவன் வரவேற்புரையாற்றினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி  கிளை செயலர் ஜவஹர் ஹசன் ரெட்கிராஸ் திருச்சி கிளை செயல்பாடுகளை விளக்கினார்....

சேர்மன் ராஜசேகரன் தலைமை வகித்து பேசுகையில்,

கிறிஸ்துமஸ் புத்தாண்டு விழாவை முன்னிட்டு தூய வளனார் பேராலயம் வளாகத்திலும், ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் திருக்கோவில் வளாகத்திலும், சமயபுரம் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு சமயபுரம் கோவில் வளாகத்திலும் வரக்கூடிய பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம், கிருமி நாசினி தன் திரவம் வழங்கல்,வெப்பமானி கொண்டு உடல் வெப்பம் கண்டறிதல், ஆக்சிமீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவு கண்டறிதல், மனித எடை, உயரம், ரத்த அழுத்த முகாம் உள்ளிட்டவை நடத்தப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் காலங்களில் பொதுமக்களிடம் 100% வாக்களிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இரத்ததான முகாம் கல்லூரிகளில் நடத்தப்பட்டது.....

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாநில கிளை வழிகாட்டுதல்படி தேசிய கிளை திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு  ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சிராப்பள்ளி என மூன்று மாவட்டத்திற்கு மட்டுமே ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் குழு அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இல்லம் தேடி ஆரோக்கியம் குறைந்தவர்களுக்கு சேவை அளிக்கவும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை செயல் திட்டம் வகுத்து வருகிறது என்றார்....துணைச் சேர்மன் மருத்துவர் ராமகிருஷ்ணன், துணைத்தலைவர் செளமா ராஜரெத்தினம் உள்ளிட்டோர முன்னிலை வகித்தனர்.

இணைச் செயலர் எழில் ஏழுமலை, நிர்வாகக்குழு உறுப்பினர் மனோகர் உள்ளிட்டோர் ஆலோசனை வழங்கினார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக ஆலோசனைக் குழு உறுப்பினர் இளங்கோவன், வழிகாட்டு குழு உறுப்பினர்கள் லாரன்ஸ், குணசேகரன், மக்கள் தொடர்பு அலுவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக பொருளாளர் முரளிதரன் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments