இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ...
திருச்சி மாவட்ட பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியாவின் சார்பில் மாவட்ட செயலாளர் அப்சல்கான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பாலக்கரை ரவுண்டானாவில் நடைபெற்றது.....
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ராமநவமி பேரணிகளில் குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், உள்ளிட்ட 7 மாநிலங்களில் ஊர்வலத்தின் போது நடத்தப்பட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டிப்பதுடன் இந்துத்துவ அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சியாக இப்படி இஸ்லாமியர் தாக்கப்படுவதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.....
ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மண்டல தலைவர் அமீர் பாஷா, திருவரம்பூர் பகுதி தலைவர் முகமது அலி, இப்ராஹிம், , SDPI கட்சியின் திருச்சி மண்டல தலைவர் ஹசன்பைஜி,தெற்கு மாவட்ட செயலாளர் ஜாவித் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments