BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** உலக பூமி தினம்🌍🌍

உலக பூமி தினம்🌍🌍

உலக பூமி தினத்தை முன்னிட்டு கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரி தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் உலக பூமி தினம் கல்லூரி வளாகத்தில் இன்று நடந்தது.

எந்த மனிதனும் திட்டம் போட்டு பூமியை உருவாக்கவில்லை. மனித குலம் பிறப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்களை தன் மடியில் தாங்கிக்கொள்ள எழில் நிறைந்து பிறந்ததுதான் இந்த பூமி. சுற்றுச்சூழல் பல சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கிய பின்னர் உருவானது தான் இந்த நாள். 



இந்த பூமியில் நிலவி வரும் சுற்றுச்சூழல், காற்று மாசு, இயற்கை வளங்கள், நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நமது பூமியின் சுற்றுச்சுழலைக் கொண்டாடுவதற்காகவே ஆண்டுதோறும் ஏப்ரல் 22 -ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது ‘உலக ‘பூமி தினம்.’ 



அனைத்து உயிர்களும் தடையின்றி வாழ உகந்த ஒரே கிரகம் பூமி மட்டும் தான் என்ற பதிலே மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தும் செய்தியாக உள்ளது. 

பூமியின் கட்டமைப்பு என்பது மனிதன் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் வாழக்கூடிய வகையில் மிக சிரத்தையுடன் இயற்கை வரமாய் உருவானதாகும். எந்தெந்த உயிரினம் எங்கெங்கே வாழுதல் நலம் என்று தானாகவே பூமி ஏற்படுத்திய வரைமுறைதான் மனிதன் நாட்டிலும், விலங்குகள் காட்டிலும் வாழும்படியாக காலப்போக்கில் மாறியது. 


மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, மறுபக்கம் பூமியின் வளங்கள் குறைந்து கொண்டே வருகிறது. தினம் தினம் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் சுற்றுச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. மனிதனின் பேராசையோ, போதும் என்ற மனமின்றி இயற்கையை அழித்து செயற்கை பொருட்களை உருவாக்கத் தொடங்கியது. அதன் ஒரு தொடக்கமாகத்தான் காடுகள் அழிக்கப்பட்டு விலங்குகளின் உறைவிடங்கள் அபகரிக்கப்பட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கான அரிய வகை உயிரினங்கள் அழிந்தும், அழிவின் விளிம்பிலும் நிற்கின்றன



சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அன்றாடம் சுற்றித்திரிந்த சிட்டுக்குருவி இனங்கள் இன்று முற்றிலும் காணாமல் போனது. 2050 ஆம் ஆண்டிற்குள் ஐம்பது சதவீத உயிரினங்கள் பூமியிலிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக் கொள்ளும் என்ற தகவல் மிகவும் வேதனையாக உள்ளது



உயிரினங்கள் அழிவின் விளிம்பில் நிற்க பூமி வெப்பமயமாகுவதும் ஓர் முக்கிய காரணமாகும். வேகமாக உருகி வரும் பனி பாறைகள் பல்வேறு பனிக்கரடிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது. மேலும் அதிக வெப்பமானது கடல் வாழ் உயிரினங்களை இன பெருக்கத்திலிருந்தும் தடுக்கிறது. 

மரம் வளர்ப்போம்: உலகம் வெப்பமயமாகுதல், காற்று மாசு, காடு அழிப்பு, பசுமைக் குடில் விளைவுகள், தண்ணீர் பஞ்சம் என்று பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது. முடிந்தவரை காற்று மாசை தடுத்து, அதிக அளவில் மரங்கள் நட்டு, தண்ணீர் சேமிப்பு மேலாண்மை திட்டங்களை மேம்படுத்தி, இயற்கையை அதன் வழியிலேயே பாதுகாத்தால் மட்டுமே மனிதனால் தன் அடுத்த தலைமுறைக்கு தன் முன்னோரும் தானும் அனுபவித்த இயற்கை வளங்களை பரிசாய் தரமுடியும். இல்லையேல் இனிவரும் தலைமுறைகள் புலியையும், யானையையும், ஏன் மழையை கூட புகைப்படத்தில்தான் காண இயலும். எனவே, முடிந்த வரை மரங்கள் நடுவோம். மழை, மன்வளம் பெறுவோம். 


காலநிலை மாற்றம் என்பது சிறிது காலமாகக் கவலைக்குரிய ஒரு முக்கிய காரணியாக உள்ளது. இது மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது, மேலும் விஷயங்கள் மோசமடைவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை.பூமியின் பாதுகாப்பிற்காக மட்டுமல்ல… மனிதனின் பாதுகாப்புக்காகவும் அன்றாட வாழ்வில் நாம் சில மாற்றங்களை கொண்டு வரவேண்டியது அவசியம். நம்மைக் காக்கும் இந்த இயற்கை அன்னையை கண்ணும் கருத்துமாய் காக்க இந்த பூமி தினத்தில் இருந்து அனைவரும் தொடங்குவோம்.என உறுதி மொழி எடுக்கப்பட்டது. 

உலக பூமி தினத்தை முன்னிட்டு கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரி தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

நெகிழியைத் தவிர்ப்போம். புவியைக் காப்போம், புவி வெப்பமாதலைக் குறைக்க தண்ணீர் சிக்கனம், மின்சார சிக்கனம், எரிபொருள் சிக்கனம் கடைபிடிப்போம், மரக்கன்றுகளை நட்டு பாதுகாப்பாய் வளர்ப்போம், மண்வளம் காப்போம், மரங்களே மண் அரிப்பைத் தடுக்கும்.

மகத்தான ஆயுதம், கனிம வளங்களை காப்போம் காற்று மாசு தடுப்போம், உயிர்க்காற்று பெற மரங்களே கருப்பையாம், வருங்கால தலைமுறைக்கு மரங்களே சொத்தாகும் போன்ற விழிப்புணர்வு வாசம் அடங்கிய மனித சங்கிலி பேரணி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வளாகத்தில் நாவல் புங்கன் மரக் கன்று நடப்பட்டது...இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் ப. நடராஜன் முன்னிலை வகித்து மரக்கன்று நட்டு வைத்தார்.

தண்ணீர் அமைப்பின் செயல்தலைவர் திரு.கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் கி.சதீஷ் குமார், நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.கே.ராஜா மற்றும் மாணவர் மன்ற உறுப்பினர்கள் ஆகாஷ், ஹரிஹரதாஸ், சதீஷ் குமார், கலைவாணன், இன்பன் பிரகாஷ்ராஜ், சகாய கிளிண்டன், ரெங்கபிரியா, காயத்ரி, நித்யா, அன்னபூரணி, நோயல், ஜெரோன் ஆகியோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments