BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** இந்திய விடுதலைப்போராட்ட அஞ்சல்தலை புகைப்பட கண்காட்சி

இந்திய விடுதலைப்போராட்ட அஞ்சல்தலை புகைப்பட கண்காட்சி

இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு அஞ்சல்தலை மற்றும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது...

பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்று துறை சார்பில் சுதந்திர இந்தியாவின் 75-வது  சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு குறித்த அஞ்சல்தலை மற்றும் புகைப்பட சிறப்பு கண்காட்சி  நடைபெற்றது....



 கண்காட்சியினை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் திறந்து வைத்தார். பதிவாளர் கணேசன், தேர்வு நெறியாளர் சீனிவாச ராகவன், நிதி அலுவலர் கருணாநிதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்....


இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழகத்தின் சுதந்திர போராட்ட தலைவர்கள் மற்றும் தியாகிகளின் வரலாறு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள்  தெரிந்து கொள்ளும் வகையில் இந்திய அஞ்சல் துறையினர் வெளியிட்ட பொது பயன்பாடு, நினைவார்த்த அஞ்சல்தலை, குறு வடிவ அஞ்சல்தலை, முதல் நாள் அஞ்சல் உறை, சிறப்பு அஞ்சல் உறை,அஞ்சல் அட்டை என பல்வேறு அஞ்சல் தலைகளை சிறப்பு முத்திரைகளுடன் காட்சிப்படுத்தி இருந்தனர். திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர், செயலாளர் விஜயகுமார்


புதுக்கோட்டை பஷீர் அலி, மகாராஜா, சதீஷ் பாபு, முத்து மணிகண்ட கார்த்திகேயன், சந்திரசேகரன், பத்ரி நாராயணன், கிரிஷ் குமார், கீர்த்தனா உள்பட பலர் தனது சேகரிப்பினை காட்சிப்படுத்தி இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்கு குறித்து பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் சீனிவாசராவ், அசோகன், கௌரவ விரிவுரையாளர்கள் மாரிமுத்து, சித்ரலதா, முரளி, சுமதி கமலம், பிரபு உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்து இருந்தார்கள்.

Post a Comment

0 Comments