// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** மெல்ல மலரும் குழந்தைகளுக்கு மேன்மை தரும் செயல்பாடு

மெல்ல மலரும் குழந்தைகளுக்கு மேன்மை தரும் செயல்பாடு

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் நீட்சியாக - ஒவ்வாரு பள்ளியிலும் உள்ள மாற்றுத்திறனுடைய குழந்தைகள், மெல்லச் கற்கும் மாணவர்கள், கற்றல் குறைபாடு உடைய மாணவர்கள் என 10 மாணவர்கள் உடைய 15 ஊராட்சி மற்றும் நகராட்சி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 15 தன்னார்வலர்களை நியமித்து 10 குழந்தைகளுக்கு மட்டும் சிறப்பு கவனம் அளித்து 2 மணி நேரம் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.... 


அதற்கான பயிற்சியும், நிதி உதவியும் தன்னார்வலர்களுக்கு திருச்சி ஹோலிகிராஸ் சர்வீஸ் சொசைட்டி ஏற்றுக் கொள்கிறது. 


இதன் மூலம் படிக்காத மாணவர்கள் யாரும் இல்லை என்ற நிலையை அந்தநல்லூர் ஒன்றியத்தில் ஒரு முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டு இன்று தொடக்க விழா நடைபெற்றது, திருவானை காவல் தந்தை பெரியார் நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments