NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி அறிவாளர் பேரவை நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா

திருச்சி அறிவாளர் பேரவை நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா

திருச்சி அறிவாளர் பேரவை இருபத்திமூன்றாம் ஆண்டு நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா திருச்சி தமிழ்ச் சங்கம் மன்றத்தில் நடைபெற்றது. திருச்சி அறிவாளர் பேரவை மதிப்புறு ஆலோசகர் முனைவர் அசோகன் வரவேற்று புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்....தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழக புலத்தலைவர், மதுரை காமராசர் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் கற்பக குமரவேல் சிறப்புரையாற்றினார்..

பெரியார் ஈவேரா அரசுக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சுப்பிரமணியன், சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் செல்வராணி, புனித வளனார் கல்லூரி தமிழாய்வுத் துறைத்தலைவர் முனைவர் பெஸ்கி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அறிவாளர் பேரவை தலைவர் முனைவர் திலகவதி ஏற்புரையாற்றினார்...

திருச்சி அறிவாளர் பேரவை புதிய நிர்வாகிகளாக முனைவர் திலகவதி தலைவராகவும், கவிஞர் கோவிந்தசாமி பொதுச் செயலாளராகவும், லால்குடி முருகானந்தம் பொருளாளராகவும், முனைவர் செயலாபதி, நல்லாசிரியர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் துணைத் தலைவராகவும், நல்லாசிரியை மல்லிகா இணைச் செயலராகவும், முனைவர் சீனிவாசன் மக்கள் தொடர்பாளராகவும், முனைவர் அருணா, பெரும்புலவர் தமிழாளன், கவிஞர் மாரிமுத்து, சமூக சேவகர் பரசுராமன் ,முனைவர் ஜோதிலட்சுமி, லால்குடி திருமாவளவன், யோகா ஆசிரியர் விஜயகுமார்  உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாகவும் பொறுப்பேற்றனர். முன்னாள் தலைவர் கி.ஆ.பெ.வி. கதிரேசன், பொதுச் செயலாளர் சண்முகநாதன், பொருளாளர் துரை. வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டும் புதிய நிர்வாகிகளுக்கு சான்றோர் பெருமக்கள் வாழ்த்துக்களையும் கூறினார்கள். லால்குடி முருகானந்தம் நிகழ்ச்சியை தொகுக்க, நிறைவாக செயலாளர் கவிஞர் கோவிந்தசாமி நன்றியுரையாற்றினார்.

Post a Comment

0 Comments