மொழி திணிப்பு மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசை மாற்ற வேண்டும் சென்னையில் நடைபெற்ற விழாவில் கனிமொழி எம்.பி பேச்சு.....
சென்னை - படூர், இந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் கல்லூரியில் நடைபெற்ற Youth Talks நிகழ்ச்சியில் பங்கேற்ற தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்கள், கொள்கைப் பிடிப்பு, சமூகநீதி, தமிழகத்தின் எதிர்காலம் குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றினார்....
கல்லூரியில் மாணவர்களை சந்தித்து பேசிய அவர், எப்போது மொழி மீது திணிப்பு நடக்கிறதோ, அது வெறும் மொழி மட்டும் கிடையாது வரலாறு, கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சியாகும். இது தவறு என்று பேசினார்.பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ஒன்றிய அரசை மாற்ற வேண்டும் என்று பேசினார்.
0 Comments