NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** கருணாநிதி பிறந்தநாளில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை

கருணாநிதி பிறந்தநாளில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை

திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது..பிறந்தநாளையொட்டி 10 ஆண்டுக்கு மேல்  சிறையில் இருக்கும் இஸ்லாமிய  சிறை வாசிகளை விடுதலை செய்ய கோரி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் ரபீக் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்...


இரண்டு நாட்களுக்கு முன்பாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பிறகு தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்றத்தின் மூலமாக பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது மிக்க மகிழ்ச்சி..  முஸ்லிம் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் தங்களுடைய தேர்தல் வாக்குறுதியுமாகிய விசாரணை என்ற அடிப்படையில் பத்து,இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் தங்களுடைய வாழ்நாளை கழிக்கும் கோவை அப்பாவி சிறைவாசிகளுக்கும் சுதந்திர காற்றை சுவாசிக்க தங்களுடைய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகவும் வார்த்தைக்கு வார்த்தை சமூக நீதியை நிலைநாட்டும் அரசு என்று முழக்கமிடும் தாங்கள் சிறிதும் தாமதிக்காமல் சட்டமன்றத்தை கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உடனடியாக விடுதலை செய்ய வழிவகை செய்யுமாறு சிறும்பான்மை சமூகமான முஸ்லிம் சமுதாய மக்களின் கோரிக்கையாக யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்

Post a Comment

0 Comments