// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்க்கொண்ட தமிழக முதல்வர்

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்க்கொண்ட தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  மதியம் தனி விமானத்தில் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பெய்யாமொழி , திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும்  கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் . 

வரவேற்பு முடிந்ததும்  திடிரென  மாநகராட்சி அலுவலகம் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு மாநகராட்சி  ஆணையர்  அறைக்கு சென்றார். 

அப்போது அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுக்க காத்திருந்த மக்களை  ஒவ்வொருவராக அழைத்து மனுக்களை பெற்றார். சிலரிடம் என்ன குறைகள் என கேட்டறிந்தார். அதிகாரிகளிடமும் ஒவ்வொரு கோப்புகளையும் கேட்டு கோப்புகளை பெற்று  அதன் மீதும் விசாரித்தார். சுமார்  20 நிமிடத்திற்கும் மேலாக அங்கு இருந்தார்.  முதல்வருடன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என் நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி , மேயர் அன்பழகன் ,மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் ,  நகராட்சி சுகாதார அலுவலர் யாழினி மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments