திருச்சி மாநகராட்சி அவசரக்கூட்டம் நிதி ஒதுக்கீடு பாரபட்ச காட்டுவதாகவும், அமைச்சர் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததாக அதிமுகவினர் குற்றச்சாட்டு - திமுகாவின் எதிர்பு தெரிவித்தால் அதிமுகவினர் வெளிநடப்பு...திருச்சி மாநகராட்சியின் அவசரக்கூட்டம் அன்பழகன் தலைமையில்,துணை மேயர் திவ்யா மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள், பட்ஜெட் மற்றும்
திட்டம் தொடர்பாகவும் விவாதத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அப்போது 65 ஆவது வார்டு சேர்ந்த அதிமுக மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும் மேலும் மேற்கு தொகுதிக்கான ( மேற்கு தொகுதி நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொகுதி ஆகும்) நிதியை அதிக அளவில் ஒதுக்குவதாக கூறினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதனை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அம்பிகாபதி, அரவிந்தன் மற்றும் அனுசியா ஆகியோர் திமுக உறுப்பினர்களை செயலை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி எங்களுக்கு மாமன்றத்தில் பேச வாய்ப்பு அதிகளவில் தரப்படுவதில்லை.மேற்கு தொகுதி அதிகபட்சமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எல்லா மக்கள் திட்டங்கள் பயன்படுத்த வேண்டும் என நாங்கள் தெரிவித்தோம். ஆனால், எல்லாருக்கும் சமமாக நிதி ஒதுக்குவதாக தெரிவித்தனர். ஆனால் நிதி ஒதுக்குதல் பாரபட்சம் காட்டுகிறார்கள்.தெற்கு தொகுதிக்கு மட்டுமே பட்ஜெட் போடப்பட்டதாக தெரிகிறது.
உபரி பட்ஜெட் காட்ட வேண்டும் என்பதற்காக பல் திட்டங்கள் செயல்படுத்தாமல் இந்த பட்ஜெட்டை தயார் செய்திருக்கின்றனர் என தெரிவித்தார்.மேலும், அதிமுக உறுப்பினர் அரவிந்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில்
கிழக்கு தொகுதி என்பது அதிக மக்கள் நெருக்கம் மற்றும் போக்குவரத்து நிறைந்த பகுதி இதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
0 Comments