BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** உலக சுற்றுச்சூழல் தினம் பிளாஸ்டிக் பை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக சுற்றுச்சூழல் தினம் பிளாஸ்டிக் பை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மாற்றம் அமைப்பு தூய வளனார் கல்லூரி நாட்டு நளப்பணி திட்ட மாணவர்கள் இணைந்து  திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மெயின் காட் கேட் பகுதியில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பைகள் பொருட்களை தவிர்ப்போம்  சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்று  விழிப்புணர்வு செய்தனர் ...


மேலும் பிளாஸ்டிக் பைகளை கொண்டு வந்த பொது மக்களிடம் காகித பைகளை வழங்கி பிளாஸ்டிக் பைகளை பெற்று கொண்டு பிளாஸ்டிக்  பயன்பாட்டினால் சுற்றுச்சூழலக்கும் நமக்கும் ஏற்படும் தீமைகளை எடுத்து கூறினார் இதனை பார்த்த பொதுமக்கள் தாமக முன்வந்து தங்களிடம் இருந்த பிளாஸ்டிக் பைகளை மாணவ மாணவிகளிடம் கொடுத்து காகித பைகளை வாங்கி சென்றனர்..

முன்னதாக தூய வளனார் கல்லூரி வளாகத்தில் நாட்டு நளப்பணி திட்ட மாணவ மாணவிகளிடம் காகித பைகளை மற்றும் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது..



இந்நிகழ்வில் கலந்து கொண்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சர்வதேச பயிற்சியாளர் Dr. லாரன்ஸ் அவர்கள் கலந்து கொண்டு  மாணவ மாணவிகள் மத்தியில் இந்த பூமியை பாதுகாக்க வேண்டிய பொருப்பு நம் அனைவரிடமும் உள்ளது என்றும் அதை உணர்ந்து நாம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்..




விட்டில் நாம் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை மக்காத குப்பையை சரியாக பிரித்து கொடுக்க வேண்டும் நம் பகுதியில் சுற்றுச்சூழலை மாசு படுத்தாமல் நாம் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்..


மக்கள் சட்ட உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்  வழக்கறிஞர்  தீலீப் அவர்கள் மாணவ மாணவிகள் மத்தியில் சுற்றுச்சூழல் தினத்தில் மட்டும் நாம் இயற்கை மீது அக்கறை கொண்டவர்களாக மட்டும் இல்லாமல் நம்முடைய பிறந்த நாள் குடும்பத்தில் உள்ள நமது உறவுகளின் பிறந்த நாள்களில் ஒரு மரகன்றை நட்டு வளர்க்க வேண்டும் என்று கூறினார்...


 

  இந்நிகழ்வில் தூய வளனார் கல்லூரியின் நாட்டுநளபணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் அந்தோனி ஜேசுதாஸ் ஏஞ்சில் பிரீத்தி  அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா இணை செயலாளர் அல்லி கொடி ,அனுஷ்மா நந்தினி, பார்த்திபன் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான தாமஸ் மற்றும் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments