NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் திருவெறும்பூர் R.S.K மற்றும் BHEL பள்ளி முற்றுகை

தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் திருவெறும்பூர் R.S.K மற்றும் BHEL பள்ளி முற்றுகை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் இயங்கும் ஆர்.எஸ்.கே மற்றும் பி.ஹெச். இ.எல் பள்ளிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், மாணவர்களை நமஸ்தே நமஸ்காரம் என்று சொல்ல வற்புறுத்த படுத்துவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அதிக அளவில் பன்மடங்கு கட்டணத்தை உயர்த்தி இருப்பதை கண்டித்தும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், திக, மதிமுக, சிபிஐ, தமிழ் தேசிய பேரியக்கம் , திராவிடர் விடுதலைக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், திராவிடர் மாணவர் கழகம், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் பள்ளி வாயில் முன் இன்று  காலை அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஒன்றியத் தலைவர் கபிலன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.


இதில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநிலத் துணைச் செயலாளர் தினேஷ்குமார் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் மாநில குழு உறுப்பினர் தாஸ் மற்றும் நிர்வாகிகள் விக்னேஷ்வரன், புவனேஷ்வரன்,திலக் ஆதித்யா, ஓம் பிரகாஷ், அஸ்வின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத்தலைவர் ரம்யா, 


இளைஞர் பெருமன்றம் ஒன்றிய செயலாளர் தமிழரசன், பிரகாஷ், சிவசங்கரன், டிக்சன்ராஜ், அப்துல்லா, மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் ராஜ்குமார் மற்றும் பழனிச்சாமி, ராதாகிருஷ்ணன், .ஜார்ஜ் நிக்கோலஸ், வின்சென்ட், ஆரோக்கியதாஸ் அதோடு திராவிடர் கழக தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர், திராவிடர் தொழிலாளர் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி ஆறுமுகம், பேராசிரியர் நெடுஞ்செழியன், மதிமுக துவாக்குடி நகர்மன்ற உறுப்பினர் மோகன் பெரியகருப்பன், தமிழ் தேசிய பேரியக்கம் மாவட்ட செயலாளர் இலக்குவன், தமிழ் தேசிய பேரியக்கம்  நகர செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments