// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி SRMU அமைப்பினர் கண்டன போராட்டம்.

அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி SRMU அமைப்பினர் கண்டன போராட்டம்.

 மத்திய மோடி அரசு கடந்த இரண்டு வருடமாக ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கவில்லை. இந்நிலையில் தற்போது அக்னிபாத் திட்டத்தின் கீழ் சுமார் 4 வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இராணுவ வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிக்கை வெளியிட்டு தற்போது அதற்காக இந்தியா முழுவதும் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெற்று வருகிறது. 


இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், ரயில்வே துறையிலும் பல லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கும் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பது போல ஒப்பந்த அடிப்படையில் சில வருடங்களுக்கு மட்டும் ஆள் எடுக்கும் நிலை ஏற்படுத்தாமல் தடுக்கும் வகையில், திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், ரயில்வே துறையில் உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கோஷமிட்டனர்



இதுகுறித்து எஸ் ஆர் எம் யு பொதுச்செயலாளர் வீரசேகரன் செய்தியாளர்களிடம்  கூறுகையில்:-

 அக்னிபாத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் ரயில் நிறுத்த  போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தார்.

Post a Comment

0 Comments