BREAKING NEWS *** டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் *** சித்த மருத்துவர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு

சித்த மருத்துவர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு

தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாட்டில்  அமைச்சர் கே.என். நேருவுக்கு கலைஞர் விருது வழங்கி கௌரவிப்பு.அனைத்திந்திய சித்த மருத்துவர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. கொரோனா நோயிலிருந்து மக்கள் விடுபட சித்த மருத்துவத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்தது.

அதேபோல் தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும்  என தமிழக முதல்வர் அறிவித்தார். மேலும் திருச்சியில் சித்தமருத்துவ கல்லூரி துவங்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர்  கே.என்.நேரு அறிவித்தார்.


இந்த வகையில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாநில மாநாடு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது


விழாவில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டில் அமைச்சர் கே என் நேருவுக்கு கலைஞர் விருதை அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் வழங்கினார்.


மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நேரு வழங்கினார். கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சித்த மருத்துவர்களுக்கு கலைஞர் விருதுகளை அமைச்சர் நேரு வழங்கி கௌரவித்தார்.தொடர்ந்து அமைச்சர் நேரு மாநாட்டு மலரினை வெளியிட்டார்.மாநாட்டு மலரினை திருச்சி மாநகர மேயர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்.


இந்த மாநாட்டில் மேயர் அன்பழகன், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, திமுக பகுதி செயலாளர்கள் கண்ணன், மோகன்தாஸ், இளங்கோ, கவுன்சிலர் முத்துச்செல்வம், டோல்கேட் சுப்பிரமணி உள்ளிட்டோருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments