// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழக ஏரி மற்றும் ஆறு பாசன விவசாய சங்கத்தினர் சென்னையில் போராட்டம் நடத்த முடிவு

மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழக ஏரி மற்றும் ஆறு பாசன விவசாய சங்கத்தினர் சென்னையில் போராட்டம் நடத்த முடிவு

தமிழக ஏரி மற்றும் ஆறு விவசாய சங்கத்தின் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர்  விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் 25க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில தலைவர் பூரா.விஸ்வநாதன் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவது சம்பந்தமாக காவிரி கூட்டத்தில் பேச மத்திய அரசு அனுமதி கூடாது.



மாநில அரசு மின் கட்டண உயர்வை அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 17ஆம் தேதி சென்னையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மேலும், தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து உடனடியாக நெல் கொள் முதல்  செய்ய வேண்டும்.

இலவச விவசாய மின் இணைப்பில் மீட்டர் பொருத்தும் திட்டத்தினை  கைவிட வேண்டும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments