BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** குரங்கு அம்மை நோய்க்கு திருச்சி GH-ல் சிறப்பு வார்டு - டீன் நேரு தகவல்

குரங்கு அம்மை நோய்க்கு திருச்சி GH-ல் சிறப்பு வார்டு - டீன் நேரு தகவல்

கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலைமையில் தமிழக முழுவதும் அனைத்து மருத்துவமனைகளில் முழு வீச்சில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் குரங்கு அம்மை நோயை தடுக்கும்  வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவமனை  அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு


தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு தற்போது இல்லை. குரங்கு அம்மை பாதிப்பை மேற்கொள்ளும் வகையில் திருச்சி அரசு மருத்துவமனையில் 8 படுக்கைகள் கொண்ட முன்னெச்சரிக்கை சிகிச்சை பிரிவு தயாராக உள்ளது.


மேலும் குரங்கு அம்மையின் அறிகுறிகள் என்னவென்றால் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சளி, தொண்டையில் சிறிய கட்டிகள் என ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணிதி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். மேலும் வெளிநாடுகளில் இருந்து இங்கு வருபவர்களுக்கு


 தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த குரங்கு அம்மையானது மூச்சுக்காற்று, சளி படிந்த துணிகள் உள்ளிட்டவைகளால் எளிதாக பரவ வாய்ப்புள்ளது. இதன் அறிகுறி சுமார் மூன்று நாட்களில் தெரிந்துவிடும்.


இந்த அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரி எடுத்து தற்போது பூனாவுக்கு அனுப்பி அதன் முடிவை தெரிந்து கொண்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது திருச்சியில் அந்த விதமான குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என தெரிவித்தார்.

மேலும் திருச்சியை பொறுத்தவரை கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே இங்கு 1360 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது மேலும் தீவிர சிகிச்சைக்கு வேண்டிய ஆக்சிஜன் படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. தற்போது இங்கு 

19பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். அவருக்கு மாரடைப்பின் காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அவரும் விரைவில் குணமடைவார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அவசியம் முககவசம் அணிந்து கொள்ள வேண்டும். மேலும் தற்பொழுது அரசு பூஸ்டர் டோஸ்

18 வயது முதல் 58 வயதுக்குள்ளான நபர்களுக்கு அளித்து வருகிறது. எனவே கொரோனா தொற்று நோய்க்கான இரண்டு டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் அறுபது நாள் கழித்து மீண்டும் பூஸ்டர் டோஸ் உடனடியாக எடுத்துக் கொள்ளலாம்.

திருச்சி அரசு மருத்துவமனையில் 300க்கு செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஏற்கனவே உள் நோயாளியாக சுமார் 1450 நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது இருக்கும் செவிலியர்களை வைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 300 செவிடைகள் பணிக்கு தேவை இது தொடர்பாக அமைச்சரிடம் தெரிவித்து விரைவில் செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்தார்.


Post a Comment

0 Comments