// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** பிஸ்கோத் vs அல்வா விழிப்புணர்வு குறும்படம் குறும்பட போட்டிகளில் தேர்வு

பிஸ்கோத் vs அல்வா விழிப்புணர்வு குறும்படம் குறும்பட போட்டிகளில் தேர்வு

 திருப்பூர்   ஈஷா மீடியா தயாரிப்பில் 30 க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியவரும் அதில் பல சமூக விழிப்புணர்வு படங்களை இயக்கி பல்வேறு விருதுகளை பெற்ற இயக்குனர் திரு. குமார் தங்கவேல் அவர்கள் இயக்கத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பிஸ்கோத் vs அல்வா விழிப்புணர்வு குறும்படம் பல்வேறு குறும்பட போட்டிகளில் கலந்து கொள்ள    தேர்வாகியுள்ளது  3 நிமிட குறும்பட போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளது இப்படம் 3 நிமிடத்தில்  விழிப்புணர்வு செய்தி சொல்லும் வகையில் குறும்படத்தை எடிட் செய்து போட்டிக்கு அனுப்பியுள்ளனர்.


பட குழுவினர் படத்தை பார்த்த பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் சாப்ளின் பாலு அவர்கள் பிஸ்கோத்  vs அல்வா என்ற 3 நிமிட குறும்படம் ஒரு இடத்தில் கூட சலிப்பு தட்டாமல் பெரிய படத்திற்கு இணையாக பிஸ்கோத்  vs அல்வா குறும்படம் அமைந்துள்ளது என்றும் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்...







இயக்குனர் குமார் தங்கவேல்  அவர்கள் கொரோனா காலகட்டத்தில் பல விழிப்புணர்வு படங்களை எடுத்து காவல்துறையின் நன்மதிப்பை பெற்று திரைத்துறையில் சாதித்துள்ளார்.  இந்த பிஸ்கோத் vs அல்வா  படம் பல விருதுகளை பெறவும் இப்படி திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பும் அங்கிகாராமும்  கொடுத்து ஊக்குவித்தால் மேலும் பல சாதனைகளை படைப்பார்கள்  என்று கூறினார் இப்படத்தில் சமூக ஆர்வலரும் நடிகருமான திருச்சி ஆர்.ஏ.தாமஸ் அவர்கள் 2  விதமான கெட்டபுகளில் தோன்றி நடித்துள்ளார்

 

ஈஷா மீடியா தயாரிப்பில் இயக்குனர் குமார் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ளது   பிஸ்கோத் vs அல்வா  படம்

கதைக்களம் .. முத்துரத்தினம். ஒளிப்பதிவு யாசின் ,குமார்  தங்கவேல்.            இசை கிருஸ்ணகுமார். திரைக்கதை வசனம் எடிட்டிங் டப்பிங் இயக்கம் குமார் தங்கவேல் நடிகர் நடிகைகள்   யாசின், அசோக்குமார், திருச்சி ஆன்டணி தாமஸ்,செந்தில் குமரன்,யோகராஜ்,  அனு உள்ளிட்டோர்    நடித்துள்ளார்கள் போட்டிகள் முடிவடைந்த பிறகு முழு படம் வெளியிடப்படும் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர்

Post a Comment

0 Comments