// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** கண்களை மூடி ஸ்கிப்பிங் செய்தவாறு 2.5 கிலோ மீட்டர் ஓடிய 6 வயது மாணவி

கண்களை மூடி ஸ்கிப்பிங் செய்தவாறு 2.5 கிலோ மீட்டர் ஓடிய 6 வயது மாணவி

 சுதந்திர தின விழாவையொட்டி திருச்சி பார்க் ஓவர் குழு நடத்திய புதிய சாதனை முயற்சியில் 6 வயது மாணவி ச.ஆராதனா கண்களை மூடிக்கொண்டு ஸ்கிப்பிங் செய்து கொண்டே ஓடினார். இதில் 2.5 கிலோ மீட்டர் தூரம் கண்களை மூடிக்கொண்டு ஸ்கிப்பிங் செய்து கொண்டே ஓடி தனது இலக்கை அடைந்தார். 


இதற்காக அவர் 15 நாட்கள் மட்டுமே பயிற்சி எடுத்துள்ளார். பல விளையாட்டு துறைகளில் சாதனை புரிவதே தனது லட்சியமாக வைத்துள்ள மாணவி ஆராதனா இதுவரை வில்வித்தை, தற்காப்பு கலையான தேக்வாண்டோ போன்றவற்றில் பல பதக்கத்தை வென்றவர் என்று குறிப்பிடத்தக்கது. அவரை தொடர்ந்து 7 வயது மாணவி ஆரண்யா திருச்சி அறிவியல் பூங்காவில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் வரை கண்களை மூடிக்கொண்டு ஓடி இலக்கை அடைந்தார்


Post a Comment

0 Comments