BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சி ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் 75வது சுதந்திர தின பொதுக்கூட்டம்

திருச்சி ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் 75வது சுதந்திர தின பொதுக்கூட்டம்

திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில்  75வது சுதந்திர தின பொதுக்கூட்டம் திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற்றது. 



சுதந்திரப் போராட்டத்தில் தன்னுயிரை தாய் நாட்டு விடுதலைக்காக தியாகம் செய்த வீரதிரர்களின் பெயர்களை பஸ்நிலையம், இரயில் நிலையம், மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரோடுகள், அரசு கல்வி நிலையங்கள்  போன்றவைகளுக்குக்கு நினைவுப் பெயராக சூட்டி அவர்களை பெருமை படுத்த வேண்டும். 


சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களில் பாடமாக்க வேண்டும்- திருச்சி மரக்கடையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தீர்மானம்


இந்திய தேசத்திற்காக, அதன் விடுதலைக்காக தமது உடலை, பொருளை, உயிரை தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு களை எந்தவித பாரபட்சமும் இன்றி பாட புத்தகங்களில்  முழுமையாக பதிவு செய்து அடுத்த தலைமுறை இந்தியர்களுக்கு முன்னோர்களின் வீர வரலாறுகள் பாடமாக, படிப்பினையாக கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.


சுதந்திரப் போராட்டத்தில் போராடி உயர்நீத்த தியாகிகளின் பெயர்களை பள்ளி, கல்லூரிகள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய சாலைகளில் அவர்களின் பெயரை அரசு சூட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் வாயிலாக நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு உரையாற்றியனார்.

இக்கூட்டத்தில் முஹம்மது ரூஹூல் ஹக், இல்யாஸ் ரியாஜி, முஹம்மது மீரான் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.

Post a Comment

0 Comments