BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சி ரயில் நிலையத்தில் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை

திருச்சி ரயில் நிலையத்தில் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்புப் பாதை   காவலர்கள் திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொண்டனர்.


இதில் பயணிகளின் உடைமை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பார்சல்கள், பயணிகள் வி ஐ பி அறைகள் ஆகியவற்றை மோப்ப நாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் ஆகியவற்றை கொண்டு சோதனை செய்தனர்.


அதனை தொடர்ந்து மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் ஜன சதாப்தி விரைவு ரயிலில்  பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். இந்த சோதனைக்கு மேக்ஸி மற்றும் லக்கி மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டது.இதுகுறித்து  ரயில்வே  திருச்சி கோட்டம்,பாதுகாப்பு படை, திருச்சி ஜான்சன் காவல்நிலைய  ஆய்வாளர்,தேவேந்திரன்  செய்தியாளர்களிடம் பேசுகையில்..,


வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறோம். அதில் ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளும் பயணிகளின் சோதனை இன்று நடைபெற்றது. மேலும் சந்தேகப்படும்படியான நபர்கள் மற்றும் பொருட்கள் கண்டால் பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம் என கூறினார்.

Post a Comment

0 Comments