// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் நாளை சுதந்திர தின நிகழ்ச்சிகள் மற்றும் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுவதாக அதன் மாநில தலைவர் பீமநகர் ரபீக் கூறினார் ...


மேலும் அவர் கூறும் போது 75 ஆவது சுதந்திர தின நிகழ்ச்சிகள் மற்றும் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா நாளை யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் பீமநகர் ரபிக் தலைமையிலும் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் முதல்வர் ரமீஜா அலிமா முன்னிலையில் நடைபெறுகிறது. 


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் வழக்கறிஞர் ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மேலும் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவரும் முன்னாள் வக்பு  வாரிய தலைவர்  ஹைதர் அலி கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி முஸ்லிம்களின் தியாகமும் இன்றைய நிலைமை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். 


இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட தலைவர் சாதிக் ,மாவட்ட செயலாளர் சேக் மைதீன் ,மாவட்ட பொருளாளர் சாகின்,மாவட்ட துணைத் தலைவர் ரபீக், உசேன்,மற்றும் சதக்கத்துல்லா,மாநில பொதுச் செயலாளர் அப்பாஸ் மற்றும் பக்ருதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்... இந்நிகழ்ச்சியில் சிலம்ப ‌மாணவர்களின் கலை நிகழ்ச்சியும்  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது.. என மாநில தலைவர் ரபீக் கூறினார்.

Post a Comment

0 Comments