// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** SDPI கட்சி சார்பில் சதுரங்க போட்டி

SDPI கட்சி சார்பில் சதுரங்க போட்டி

 75 வது  சுதந்திர தினத்தை  முன்னிட்டு இந்திய தேசிய கொடியை  வடிவமைத்த சுரைய்யா  தியாப்ஜி அவர்களின் நினைவாக  SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு தொகுதி 21 வது  வார்டு சார்பாக  மாபெரும் சதுரங்க போட்டி வார்டு தலைவர் இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சி மண்டல தலைவர் இமாம் அப்துல்லா ஹஸ்ஸான் பைஜி,திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், கிழக்கு தொகுதி தலைவர் தர்கா.முஸ்தபா ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மேலும்,ஆர்வமுடன் மாணவர்கள்,இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் சதுரங்க போட்டியில்  விளையாடினர்.



போட்டியின் இறுதியில் வெற்றி பெறுபவர் தர்கா  கிளை நிர்வாகத்தால் பரிசுகள் வழங்கப்பட்டன

Post a Comment

0 Comments