// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடைகள், வணிக வளாகங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடைகள், வணிக வளாகங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள்,  கடைகளில் ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தேசியக்கொடி பறக்க விட வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்து இருந்தது.. 


இந்நிலையில் இன்று திருச்சி வயலூர் சாலை அம்மையப்பன் நகர் பேருந்து நிறுத்தத்தில் தமிழ்நாடு வணிக சங்கங்களின்  பேரமைப்பின்  மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜு தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.. 


இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கடைகள் வணிக வளாகங்களில் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டது...

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், செயலாளர் செந்தில், பொருளாளர் தங்கராஜ் உட்பட தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

Post a Comment

0 Comments