// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள் ஓவிய கண்காட்சி

சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள் ஓவிய கண்காட்சி

"சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள்" என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது

 திருச்சி டிசைன் ஓவிய பள்ளி சார்பில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள் தலைப்பில் ஓவியக் கண்காட்சி திருச்சியில் ஆகஸ்ட் 13,14,15 ஆகிய மூன்று நாட்கள்  நடைபெறுகிறது.




 சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள் தலைப்பில்

 

                                                     

முப்பத்தி எட்டு மாணவ, மாணவிகள்  ஒவ்வொருவரும் நான்கு ஓவியங்களை காட்சிப்படுத்தியிருந்தனர். அதில் ஒரு ஓவியம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த ஓவியம் ஆகும். சுதந்திரப் போராட்ட வீரர்களில் வேலு நாச்சியார், பகத்சிங், திருப்பூர் குமரன், கட்டபொம்மன்,





வ.உ. சி.சிதம்பரம் பிள்ளை, திப்புசுல்தான், தீரன் சின்னமலை, கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சுப்ரமணிய பாரதியார், மருதநாயக பிள்ளை, ஊமைத்துறை, சித்தரஞ்சன் தாஸ், பண்டிட் ஜவஹர்லால் நேரு, ராணி லட்சுமி பாய், மாதாங்கிணி ஹஜ்ரா, குன்வர் சிங், அஞ்சலை அம்மாள், புலித் தேவர், அழகு முத்துக்கோன், மருதுபாண்டியர், பால கங்கார திலக், மங்கள் பாண்டே, சரோஜினி நாயுடு, விபின் சந்திர பால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், லாலா லஜபதி ராய், சர்தார் வல்லபாய் படேல், நானா சாகேப் உள்ளிட்டோர் ஓவியத்துடன் மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றினை 75 ஓவியங்களை ஒரே ஓவியமாக காட்சிப்படுத்தியிருந்தனர். 140 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.








இத்தகைய ஓவியங்களை பல்வேறு வகையான எண்ணெய் ஓவியம்,வண்ணக்கோல்,செயற்கை வண்ணக் கூழ்மங்கள், நீர்வர்ண ஓவியம்,மை ஓவியங்கள்,பூச்சு ஓவியங்கள் என வண்ண கலவை பகுதியில்  கருத்தியல் மற்றும் ஆக்கபூர்வமான யோசனைகளின் செறிவினை மாணவர்கள் காட்சிப் படுத்தி இருந்தனர். 

ஓவியக் கண்காட்சி ஏற்பாட்டினை டிசைன் ஓவியப் பள்ளியின் நிர்வாக இயக்குனர் மதன், முதல்வர் நஸ்ரத் பேகம்  செய்திருந்தனர்

Post a Comment

0 Comments