// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** தீர்க்கபடாத பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த MLA இனிகோ

தீர்க்கபடாத பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த MLA இனிகோ

தமிழக முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள தலையாய தீர்க்கப்படாத  பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் 


தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் 10 முக்கியக் கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் பரிந்துரைத்து அடுத்த 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியருக்குப் பட்டியலை அனுப்பி வைக்குமாறு தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டார்‌.

 
இரண்டே தினங்களில்  தமிழகத்திலேயே முதன் முதலாக திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ் தனது கிழக்கு தொகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத முக்கியமான 10 கோரிக்கைளை பரிந்துரைத்து அதன்   பட்டியலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா. பிரதீப்குமார் அவர்களிடம் வழங்கினார், மாமன்ற 3-வது மண்டல குழு தலைவர் மு. மதிவாணன் உடனிருந்தார்.

Post a Comment

0 Comments