// NEWS UPDATE *** தவெக ஆட்சி அமைக்க தனது ஆதரவு கடிதத்தை வழங்கியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.. *** SDPI கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியேற்றும் விழா

SDPI கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியேற்றும் விழா

 இந்திய திருநாட்டை வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற 75 ஆவது ஆண்டை முன்னிட்டு SDPI கட்சி,திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக  மாவட்ட தலைவர் முபாரக் அலி அவர்களின் தலைமையில்  கொடியேற்று நிகழ்வு நடைபெற்றது.


மாவட்ட பொது செயலாளர் தமீம் அன்சாரி அவர்கள் முன்னிலை வகித்தார்.


தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தளபதி.அப்பாஸ் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.SDPI கட்சியின்,திருச்சி தெற்கு மாவட்ட துணை தலைவர் பிச்சை கனி அவர்கள் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.



இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் இமாம்.அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட செயலாளர் ஏர்போர்ட் மஜீத், விம் மாநில செயற்குழு உறுப்பினர் மெஹராஜ் பானு ,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா மற்றும் நிர்வாகிகள்,வடக்கு மாவட்ட தலைவர் 

நியாமத்துல்லா,தெற்கு மாவட்ட,தொகுதி,அணி,கிளை நிர்வாகிகள்,செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ரூதீன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.


இறுதியாக  பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Post a Comment

0 Comments