BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** வீரபாண்டியனை கொலை செய்ய முயன்றவர்களை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

வீரபாண்டியனை கொலை செய்ய முயன்றவர்களை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

வீரபாண்டியனை கொலை செய்ய முயன்றவர்களை கண்டித்தும், கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் !





இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மு.வீரபாண்டியனை 4 .9. 2022 கஞ்சா போதை கும்பல்  கொலை செய்ய முயன்றதை கண்டித்தும், தமிழக முழுவதும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனையை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் போதை பொருட்கள் சென்றடைவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் உறையூர் குறத்தெரு பகுதியில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.





ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில நிர்வாக குழு உறுப்பினர் எம் .செல்வராஜ் உரை நிகழ்த்தினார். மேலும் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.சிவா, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் க. சுரேஷ், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் அன்சர்தீன் மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் க.இப்ராகிம், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் எம்.செல்வகுமார், மாதர் சங்க தலைவர்கள் வை.புஷ்பம், க.ஆயிஷா, ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட பொறுப்பாளர் சத்யா, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் சூர்யா, கிழக்குப் பகுதி செயலாளர் சையத் அபுதாஹிர், அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் ராஜா லிங்கம், பொன்மலை பகுதி துணை செயலாளர் ராஜா, ஒன்றிய பொறுப்பாளர் முத்துலட்சுமி, ஸ்ரீரங்கம் பகுதி துணைச் செயலாளர் சந்தோஷ், அபிசேகபுரம் பகுதி குழு பொறுப்பாளர் சரவணன் மற்றும் மேற்கு பகுதிக்கு பொறுப்பாளர் ரவீந்திரன், ஆனந்தன், பாலமுரளி, இளைஞர் பெருமன்ற நிர்வாக விஸ்வா, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க நிர்வாகி மாக்சிம் கார்கி, மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் பாட்ஷா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments