// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** யுகா பெண்கள் அமைப்பு சார்பில் ஆசிரியர் தின விழா

யுகா பெண்கள் அமைப்பு சார்பில் ஆசிரியர் தின விழா

 திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் யுகா அமைப்பு சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் அதிக மாணவர் சேர்க்கைக்காண தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா  முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது இவ்விழாவில் யுகா பெண்கள் அமைப்பாளர் அல்லிராணி பாலாஜி கலந்து கொண்டார்..


வட்டார கல்வி அலுவலர்கள் மருதநாயகம்,ஸ்டாலின்ராஜசேகர்,முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  தலைமை ஆசிரியர் சகாயசந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்..



அதிக மாணவர் சேர்க்கைக்கான விருதை ஸ்ரீரங்கம் டாக்டர் ராஜன் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லில்லிப்ளோரா முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சகாயசந்திரா திருப்பராய்த்துறை ராமகிருஷ்ணா அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமூர்த்தி ஆகியோருக்கு விருதுகள் வழங்கினார்கள்...



இவ்விழாவில் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடக்கப்பள்ளி மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட தொடக்கப்பள்ளி நகராட்சிக்கு உட்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவப் படுத்தினார்கள்

Post a Comment

0 Comments