NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** தேசிய கல்லூரியில் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைச் சொற்பொழிவு

தேசிய கல்லூரியில் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைச் சொற்பொழிவு

திருச்சி தேசியக்கல்லூரியின் தமிழ்த்துறையில் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைச் சொற்பொழிவு இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாகக் கல்லூரி முதல்வர் முனைவர் குமார் தலைமையுரை வழங்கினார். கல்லூரிச் செயலர்  ரகுநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினருக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் 'நாடாளுமன்ற நாயகர்' மாண்புமிகு திருச்சி சிவா அவர்கள்

“கல்கி எனும் எழுத்தாளுமை" என்னும் பொருண்மையில் உரையாற்றுகையில்....கல்கியின் வரலாற்றுப் புதினங்களுக்கு இணையான முக்கியத்துவம் அவரது சிறுகதைகளிலும் இடம்பெற்றிருப்பதை எடுத்துரைத்தார். குறிப்பாக, இருபதாம் நூற்றாண்டின் சமூக மாற்றங்களுக்குரிய முற்போக்குக் கருத்துகள் அவர் படைப்புகளில் இடம்பெற்றிருப்பதை எடுத்துரைத்து, நிறைவாக, இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவது எவ்வளவு முக்கியமோ அதுபோல எதிர்காலத்திற்கு நல்ல மாணவர்களை உருவாக்குவதும் மிகவும் இன்றியமையாதது என்றார்.



முன்னதாகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.ஈஸ்வரன் அவர்கள் வரவேற்புரை நல்க, இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் உதவிப்பேராசிரியர் முனைவர்

நீலகண்டன் நிகழ்ச்சித் தொகுப்பும் நன்றியுரையும் வழங்கினார். இந்நிகழ்வில் திருச்சி நகைச்சுவை மன்றச் செயலாளர் க சிவகுருநாதன், கல்லூரித்துணைமுதல்வர்கள், தேர்வுநெறியாளர், கலை மற்றும் அறிவியல் புலமுதன்மையர்கள், பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ ,மாணவியர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.

நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments