திருச்சி, தேசியக் கல்லூரியில் வணிகத்துறை சார்பாக வணிக சந்தையிடுகை மன்றத்தின் தொடக்க விழா கூட்டம் கல்லூரியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இரண்டாம் ஆண்டு முதுகலை வணிகவியல் பயிலும் மாணவி பி. மகாலட்சுமி வரவேற்புரை வழங்கினார். வணிகவியல் துறைப் பேராசிரியர் முனைவர் ஆர். சுந்தரராமன் வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்திற்குக் கல்லூரியின் சுயநிதிப்பிரிவின் வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் சவரிமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் சந்தையிடுகை வணிகவியல் துறை மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது, எளிதானது என்றும், சந்தையிடுகையில் புதுமையான யுக்தியை கையாள வேண்டும் என்றும், விடாமுயற்சியும் வேண்டும் என்றார். டாடா, பிர்லா , பில்கேட்ஸ் ஆகியவர்கள் சந்தையிடுகையில் செய்த விடாமுயற்சியைச் சுட்டிக்காட்டினார். பாராசூட் தேங்காய் எண்ணெயின் விற்பனை வளர்ச்சியைப் பற்றி கூறினார். பொருட்களுக்ககுச் சரியான மற்றும் மக்களின் மனதை ஈர்க்கும் வகையில் பெயர் வைத்தால் விற்பனை அதிகரிக்கும் என்று விளக்கினார். ஒருங்கிணைப்பாளரான வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் எஸ். கணபதி கூட்டத்யிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இரண்டாம் ஆண்டு முதுகலை வணிகவியல் பயிலும் மாணவி எம். திவ்யா நன்றி கூறினார் இரண்டாம் ஆண்டு முதுகலை வணிகவியல் பயிலும் மாணவன் பி. கீதம் நிகழ்ச்சி களைத் தொகுத்து வழங்கினார்.
திரளான வணிகவியல் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மூலம் மாணவ, மாணவிகள் பயன் அடைந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.சிறப்பு விருந்தினர் முனைவர் எஸ். சவரிமுத்துவிற்கு முதுகலை இரண்டாம் ஆண்டு வணிகவியல் பயிலும் மாணவன் குருமூர்த்தி பொன்னாடை வழங்கினார். உடன் வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் ஆர். சுந்தரராமன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ். கணபதி உள்ளனர்.
0 Comments