BREAKING NEWS *** சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஐந்தாண்டு சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டது அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வரும் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு *** பத்திரிகையாளர் சங்க தலைவர் மீது பொய் வழக்கு - அல்லூர் சீனிவாசன் பேட்டி

பத்திரிகையாளர் சங்க தலைவர் மீது பொய் வழக்கு - அல்லூர் சீனிவாசன் பேட்டி

திருச்சியில் சமூக நல ஆர்வலர் ,அவதாரம் பத்திரிகையின் ஆசிரியர்  மற்றும் தமிழ்நாடு பிரஸ் மீடியா அசோசியேசன்  சங்கத் தலைவராக இருந்து வருபவர் அல்லூர் சீனிவாசன் . இவர் மீது கடந்த செப்டம்பர் 24ம் தேதி அல்லூர் ஊராட்சி தலைவராக இருந்து வரும் விஜயேந்திரன் என்பவர் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார் . அதில் , தனது பெரிய மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி 2019 – ம் வருடம் பிப்ரவரி மாதம் ரூ . 5 லட்சம் பேரம் பேசி , முன் பணமாக ரூ . 3 லட்சத்தை 2 பேர் முன்னிலையில் அல்லூர் சீனிவாசன் வாங்கியதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது . அதன்பிறகு வேலை வாங்கி தரவில்லை என்று பணத்தை திருப்பிக் கொடுங்கள்  என்று கேட்டதாகவும் , அதற்கு உன் தலையை எடுத்து விடுவேன் என்று அல்லூர் சீனிவாசன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கடந்த 22.09.2022 அன்று கூறியுள்ளார் . மேலும் , அல்லூரை சேர்ந்த சித்திர கோனார் என்பவர் மகனான இன்னொரு சீனிவாசன் மூலம் பலருக்கும் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து அவர்களிடமிருந்து ஆர்.சி. புக்கை வாங்கி வைத்துக் கொண்டு கந்து வட்டி தொழில் செய்து வருகிறார் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார் .


இதையடுத்து , ஜீயபுரம் போலீஸ் சார்பில் அல்லூர் சீனிவாசன் மீது பண மோசடி தொடர்பாகவும் , கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டது . எந்தவித விசாரணையுமின்றி எப்.ஐ.ஆர் . பதிவு செய்யப்பட்டு 26.09.2022 அன்று ஜீயபுரம் காவல் நிலையத்தில் ஆஜராக சொல்லி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது . இதையடுத்து 26 – ம் தேதி திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி யை  அவரது  அலுவலகத்தில் அல்லூர் சீனிவாசன் நேரில் சந்தித்து , தன் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளதாக கூறி அதற்குரிய விளக்கத்தை அளித்தார்  . ரூ . 3 லட்சம் பணம் வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்த தேதியில் தான் அல்லூரில் இல்லை என்றும் , சென்னையில் இருந்ததாகவும் விளக்கம் அளித்தார் . காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளதாகவும் , அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் போலீஸ் ஐ.ஜி.யிடம் தன் தரப்பு விளக்கத்தை அளித்தார் . இதையடுத்து ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தினால் நேர்மையான விசாரணையாக அது இருக்காது என்று அல்லூர் சீனிவாசன் வலியுறுத்தியதை தொடர்ந்து , மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீஸ் எஸ்.பி. முன்னிலையில் கூடுதல் டி.எஸ்.பி. குற்றாலிங்கம் 01.10.2022 தேதியன்று  விசாரணை நடத்தினார் . அவரிடம் அல்லூர் சீனிவாசன் தனது வாக்கு மூலத்தை பதிவு செய்தார் .


அதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் அல்லூர் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . 

இது முழுக்க முழுக்க காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடுக்கப்பட்ட பொய் வழக்கு என்றும் , இது தொடர்பாக ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் . இதற்கு பின்னணியில் கார்ப்பரேட் முதலாளிகளும் , பத்திரிகை – ஊடக முதலாளிகளும் இருப்பதாக தெரிவித்தார் . நான் வட்டித் தொழில் செய்பவன் அல்ல . யாருக்கும் நான் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பறிக்கவும் இல்லை . இது முழுக்க முழுக்க பொய் வழக்காகும் . இதை நான் சட்ட ரீதியாக சந்திக்கத் தயார் . மேலும், எந்தவித விசாரணையும் நடத்தாமல் எப்.ஐ.ஆர் . பதிவு செய்ததை பத்திரிகைகளோ ஊடகங்களோ கண்டிக்காமல் தன்னைப் பற்றி பொய்ச் செய்தி வெளியிடுவதில் மட்டும் முனைப்பு காட்டுவது ஏன் ? என்று அல்லூர் சீனிவாசன் கேள்வி எழுப்பினார். 


வழக்கு பதிவு செய்யப்பட்டதாக வந்த தகவலை அடுத்து என்னிடம் எதுவும் கேட்காமல் சிலர் செய்தி வெளியிட்டுள்ளனர். இதுதான்  பத்திரிகை தர்மமா. நான் விவசாயம் செய்து வருகிறேன், வட்டி தொழில் செய்கிறவன் அல்ல.


விதிமீறல் கட்டிடம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றதன் காரணமாக வணிகர் சங்கத்தை சேர்ந்த சிலர் பஞ்சாயத்து செய்து வருகின்றனர். வணிகர் சங்கம் சார்பாக என்னிடம் பேசியவர் கோவிந்தராஜுலு. உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என தெரிவித்து விட்டேன். அவர்கள் இந்த வழக்கின்  பின்னால் இருப்பார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.  ஜீயபுரம் காவல் துறையினர் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்று கோரிக்கை வைத்ததால் தற்பொழுது ஏ.டி.எஸ்.பி குற்றாலிங்கம்  விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இன்று விசாரணை செய்தார் நடந்த உன்மையை  தெரிவித்து உள்ளேன் என தெரிவித்தார்.



பேட்டியின்போது "தமிழ்நாடு பிரஸ் மீடியா அசோசியேசன்" நிர்வாகிகள் மற்றும் சக பத்திரிகை ஊடக நண்பர்கள் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments