BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி மாணவிக்கு கலை இளமணி விருது - கலெக்டர் வழங்கினார்

திருச்சி மாணவிக்கு கலை இளமணி விருது - கலெக்டர் வழங்கினார்

 தமிழக அரசு கலை பண்பாட்டு்த் துறை சார்பாக ஆண்டுதோறும் மாவட்ட கலை மன்றத்தின் வாயிலாக சிறந்த கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2021-2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த கலைஞர்களை மாவட்டந்தோறும் தேர்வு செய்தது. அவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்க திட்டமிட்டபட்டு அதில் திருச்சி மாவட்டத்தில் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்ய நடைபெற்ற கலைஞர்கள் தேர்வு குழு கூட்டத்தில் சிறந்த கலைஞர்கள் தேர்வானார்கள். அதில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தில் இளம் வயதில் இருந்து சிறந்து விளங்கும் செயின் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகும்பு படிக்கும் மாணவி மோ.பி.சுகித்தாவிற்கு கலை இளமணி விருதினை, திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வழங்கினார்...


இந்த நிகழ்ச்சியின்போது திருச்சி மாவட்ட கலை மன்றத்தின் செயலர் சி.நீலமேகன் உடனிருந்தார். கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதியன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக 76 நிமிடங்கள் இடைவிடாது சிலம்பம் சுற்றி இந்தியா புக் ஆப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சான்றிதழை திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மாணவி மோ.பி.சுகித்தா காண்பித்து பாராட்டும் பெற்றார். 14 வயதேயான மோ.பி.சுகித்தா சிலம்பத்தில் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச சிலம்ப போட்டிகளில் பங்கேற்று பல்வேறு வெற்றிகளை பெற்றதும் அல்லாமல் சிலம்பத்தில் பல புதிய உலக சாதனையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments