NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிலம்ப மாணவர்கள் வாழ்த்து

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிலம்ப மாணவர்கள் வாழ்த்து

திருச்சியில் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சிலம்ப மாணவ மாணவிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

மேலும் உலக சிலம்ப இளையோர் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் வி.ஜெ.செந்தில் அவர்கள் கூறுகையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் மற்றும் இளைஞர் ஒருவர் விளையாட்டு துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கபட்டது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது எனவும் கூறினார்கள்.


சிலம்ப மாணவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தி புதிய விளையாட்டு துறை அமைச்சர் அவர்கள் சிலம்பத்திற்கு அரசு வேலை வாய்பில் முன்னுரிமை கொடுத்த அரசின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் உள்ளது எனவும் மேலும் அனைத்து பள்ளிகளிலும் சிலம்ப ஆசான்களை விளையாடு ஆசிரியர்களாக நியமித்தால் நமது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் மேலும் வளர்ச்சியை நோக்கி செல்லும் என நம்பிக்கையை தெரிவித்தார்கள்.




உடன் உலக சிலம்ப இளையோர் சம்மேளன துணை தலைவர் மாணிக்கம், மோகன் தமிழ்நாடு சிலம்ப இளையோர் சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் மாஸ்டர்கள் கிருஷ்ணன், சஞ்சீவி ரஞ்சன், கோகுல், பிரசாத் மற்றும் ஏராளமான சிலம்ப மாணவ மாணவிகள் பெற்றோரகள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments