// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சி சவுக் ஜாமியா பள்ளி மஹல்லா ஜமாஅத்தின் சார்பில் முப்பெரும் விழா

திருச்சி சவுக் ஜாமியா பள்ளி மஹல்லா ஜமாஅத்தின் சார்பில் முப்பெரும் விழா

திருச்சி சவுக் ஜாமியா பள்ளி மஹல்லா ஜமாஅத்தின் ஆண்டு விழா, ஹஜ்ரத் பாத்திமா மதரஸா ஆண்டு விழா மற்றும் நாட்டின் 74 வது குடியரசு தின விழா என முப்பெரும் விழா திருச்சி பெரிய கடை வீதி பகுதியில் உள்ள சவுக் மைதானத்தில் இன்று நடைபெற்றது...


 ஆற்காடு எண்டவ்மெண்டின் முதன்மை செயல் அதிகாரி பஷீர் அகமது நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அரவிந்தன், சாதிக் பாஷா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு  கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். 


தொடர்ந்து குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 






இந்நிகழ்வில் ஜமாத் கமிட்டி தலைவர் முஸ்தபா, செயலாளர் அப்துல் கரீம், பொருளாளர் சையது யாகூப், துணை தலைவர்கள் முனீர்கான், அமானுல்லா, துணை செயலாளர்கள் அமீர்ஜான், அப்துல் ஹக்கீம், அசாருதீன் மற்றும் அப்பகுதி குழந்தைகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments