// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி சமூக ஆர்வலர் ஆர்.கே ராஜாவிற்கு விருது

திருச்சி சமூக ஆர்வலர் ஆர்.கே ராஜாவிற்கு விருது

 திருச்சி சமூக ஆர்வலர்களுக்கு சூரியனார் கோவில் ஆதீனம் விருது வழங்கினார்

சூரியனார் கோவில் 28வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் சிவஞான கொழு கண்காட்சி திருச்சி தொட்டியம் பாலசமுத்திரம் சுந்தரமூர்த்தி நாயனார் திருமடத்தில் நடைபெற்றது.


நிகழ்வில் சூரியனார் கோவில் ஆதீனம் 28வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் திருச்சிராப்பள்ளியில் சுற்றுச்சூழல் நீர் நிலையை பாதுகாக்க சேவையாற்றி வரும் தண்ணீர் அமைப்பு  கே.சி.நீலமேகம், ஆர்.கே.ராஜா,





அக்னி சிறகுகள் மகேந்திரன் உள்ளிட்டோருக்கு சமூக சேவா ரத்தினம் விருதும்‌ ஆதரவற்ற அனாதை பிரேதங்களை மனைவி மகளுடன் இணைந்து நல்லடக்க பணியை மேற்கொண்டு வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு சிறந்த மனிதநேய விருதும் வழங்கி ஆசீர்வதித்தார்.

Post a Comment

0 Comments