// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** SDPI கட்சி சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

SDPI கட்சி சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ண தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு SDPI கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம்  சார்பாக மாவட்ட பொது செயலாளர் தமீம் அன்சாரி அவர்களின்  தலைமையில் நடைபெற்றது.

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மதர்.Y. ஜமால் முஹம்மது அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.


தெற்கு மாவட்ட தலைவர் K.முபாரக் அலி அவர்கள் சுரையா தியாப்ஜி வடிவமைத்த  மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் இமாம்.R. ஹஸ்ஸான் பைஜி.,MBA.,LLB.,  கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் Er.சதாம் உசைன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் SDTU மாநில செயலாளர் முகமது ரபீக்,SDTU மாவட்ட தலைவர் முஸ்தபா,வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் MAJ.சாதிக் பாஷா, மாவட்டச்  செயலாளர் தளபதி.அப்பாஸ்,மாவட்ட பொருளாளர் Dr.S.பக்ருதீன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் மர்சூக், தொகுதி,கிளை, அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இமாம்.சாகுல் ஹமீது இன்ஆமி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



Post a Comment

0 Comments